எரிபொருளுக்காக பெண் ஒருவர் நடத்திய நாடகம்! தவறி வீழ்ந்ததால் வசமாக சிக்கினார்
எரிபொருக்காக கர்ப்பிணியாக நடித்த பெண் ஒருவரின் மோசடி செயல் அம்பலமாகியுள்ளது.
பிங்கிரிய பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கர்ப்பிணியாக நடித்த பெண்ணின் வயிற்றில் இருந்த தலையணை கீழே விழுந்ததால் அந்த பெண் சிக்கியுள்ளார்.
எரிபொருள் நிலையத்தில் மோட்டார் சைக்கிளுக்கு எரிபொருள் நிரப்புவதற்காக கர்ப்பிணிபோல் வயிற்றில் தலையணையை கட்டிக்கொண்டு பெண் ஒருவர் வந்துள்ளார்.
பிங்கிரிய எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் பெறுவதற்காக வாகனங்கள் ஒரு வரிசையிலும் மோட்டார் சைக்கிள்கள் மற்றுமொரு வரிசையிலும் நிறுத்தப்பட்டிருந்தன.
தவறி வீழ்ந்ததால் கையும் களவுமாக சிக்கினார்...
இதற்கும் மேலதிகமாக சுகாதார சேவை ஊழியர்கள்,வைத்திய அதிகாரிகள் அலுவலக ஊழியர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் சிறு குழந்தைகளை வைத்திருக்கும் தாய்மாருக்காக தனியான வரிசையொன்றும் காணப்பட்டது.
இதை பயன்படுத்திக் கொண்ட அப்பெண் வயிற்றில் தலையணையை கட்டிக்கொண்டு கர்ப்பிணியைபோல் வந்து எரிபொருள் பெற்றுக் கொண்டுள்ளார்.
எரிபொருளை பெற்றுக்கொண்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் பிரதான வீதிக்கு வந்து வீட்டுக்கு செல்ல மோட்டார் சைக்கிளை திருப்பும் போது அவர் தவறி விழுந்ததில் வயிற்றில் கட்டி இருந்த தலையணையும் கீழே விழுந்துள்ளது.
சம்பவத்தை பார்த்த பொலிஸ் அதிகாரிகள் சிலர் அந்த இடத்துக்குச் சென்று பெண்ணை கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் சம்பவத்தை அடுத்து அந்தப் பெண் வெட்கத்தில் கூனிக்குறுகியபடி தலையணையை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் விரைந்து சென்றதாகவும் கூறப்படுகின்றது.

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
