காட்டுப் பகுதியில் கேட்ட பெண்ணின் அலறல் சத்தம்! விரைந்து செயல்பட்ட பொலிஸார்
காலி - பத்தேகம பகுதியில் உள்ள 45 அடி கொண்ட கைவிடப்பட்ட சுரங்கம் ஒன்றில் பெண் ஒருவர் விழுந்துள்ளார்.
பென்சில் செய்ய பயன்படுத்தப்படும் கனிய கரி எடுக்கும் சுரங்கம் ஒன்றிலேயே குறித்த பெண் விழுந்துள்ளார்.
50 வயதான பெண் ஒருவர் இவ்வாறு விழுந்துள்ளதாகவும், தற்போது அவர் மீட்கப்பட்டு காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில், இன்று காலை பத்தேகம பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காட்டுப் பகுதியில் பெண்ணொருவரின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் பொதுமக்களின் உதவியுடன் அந்த பெண்ணை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

பிறப்பிலேயே சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

விருது வாங்க சென்ற இடத்தில் அஜித் மகனுக்கு அடித்த லக்.. குடியரசு தலைவருடன் லீக்கான புகைப்படம் Manithan

இந்தியர்களே, கனடாவிற்குப் போக வேண்டாம்! பெங்களூருவில் வசிக்கும் கனேடியர் சர்ச்சை பேச்சு News Lankasri
