இலங்கையில் மேலும் மூவர் கொரோனாவிற்கு பலி! வெள்ளவத்தையை சேர்ந்த பெண் ஒருவரும் மரணம்
இலங்கையில் மேலும் மூவர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 273 ஆக உயர்ந்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் கொழும்பு - வெள்ளவத்தையை சேர்ந்த 48 வயதான பெண் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட் மரணங்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு
நாட்டில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை மேலும் உயர்வடைந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இன்றைய தினம் மேலும் மூன்று மரணங்கள் பற்றிய தகவல்களை அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, இலங்கையில் கொவிட் மொத்த மரணங்களின் எண்ணிக்கை 273 ஆக உயர்வடைந்துள்ளது.
1. அரநாயக்க பிரதேசத்தைச் சேர்ந்த 68 வயதான ஆண் ஒருவர் அனுராதபுரம் போதானா வைத்தியசாலையில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
கொவிட் நிமோனியா மற்றும் சுவாசப்பை பிரச்சினையினால் அவர் உயிரிழந்துள்ளார்.
2. கொழும்பு 6 பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதான பெண் ஒருவர் நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையில் கடந்த 17ம் திகதி உயிரிழந்துள்ளார்.
கொவிட் 19 நோய்த் தொற்று மற்றும் மாரடைப்பினால் அவர் உயிரிழந்துள்ளார்.
3. மாளிகாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதான பெண் ஒருவர் நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 14ம் திகதி உயிரிழந்துள்ளார்.கொவிட் நிமோனியா மற்றும் சுவாசப்பை செயலிழந்தமையினால் அவர் உயிரிழந்துள்ளார்.
சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகத்தினர் உறுதிப்படுத்தல்களுக்கு அமைய அராசங்கத் தகவல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.