கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண்ணுக்கு நேர்ந்த துயரம்
கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண்ணொருவர் பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் பசறை - மடுல்சீமை, கெரண்டிஎல்ல பகுதியில் தனியார் தேயிலை தோட்டம் ஒன்றில் நேற்று(22) இடம்பெற்றுள்ளது.
பிரேத பரிசோதனை
மடுல்சீமை, கெரண்டிஎல்ல பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார்.
கெரண்டிஎல்ல பகுதியில் மேற்படி பெண் நேற்று(22) தனியார் தேயிலைத் தோட்டத்தில் கொழுந்து பறித்து கொண்டிருந்தபோது, தேயிலைச் செடிக்குள் இருந்து பாம்பு தீண்டியுள்ளது.
இதையடுத்து அவர் பதுளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று(23) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பாம்பின் விஷம் உடலில் பரவியமையே மரணத்துக்கான காரணம் என்று பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

விசா கட்டுப்பாடுகள்: பிரித்தானியாவை விட்டு வெளியேறிய பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் News Lankasri

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan
