துமிந்த சில்வா விவகாரத்தில் சர்ச்சையாகும் சஜித்தின் முடிவு : ஹிருணிகா பகிரங்கம்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வழங்கிய ஜனாதிபதி மன்னிப்பின் காரணமாக அவர் விடுதலையாகியிருந்தால், தனியார் ஊடகம் ஒன்று இன்று சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளித்திருக்காது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர (Hirunika Premachandra ) தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
சஜித் பிரேமதாசவின் தோல்வி
2019 ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவின் தோல்விக்கு முக்கிய காரணம் அந்த தனியார் ஊடகம் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆனால் இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் குறித்த தனியார் ஊடகம் தனது நிகழ்ச்சி ஒன்றில் சஜித் பிரேமதாசவுக்காகச் செயற்படுவதைப் பார்க்கும் போது ஐக்கிய மக்கள் சக்தியினரே வியந்து போவார்கள்.
இதன் நோக்கம் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக்கும் ஆசையல்ல, தம்பி துமிந்த சில்வாவை விடுதலை செய்து கொள்ளச் செய்யும் செயல் என்பது மூளை உள்ள எவருக்கும் புரியும் என்றும் ஹிருணிகா பிரேமச்சந்திர குறிப்பிட்டுள்ளார்.

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 8 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri
