முல்லைத்தீவில் கிணற்றிற்குள் வீழ்ந்த காட்டுயானை
முல்லைத்தீவு -ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட ஒதியமலை கிராமத்தில் விவசாய கிணற்றில் வீழ்ந்த காட்டு யானை ஒன்று வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் மீட்கப்பட்டுள்ளது.
ஒதியமலை பகுதியில் 20 அடி ஆழம் கொண்ட விவசாய கிணற்றில் காட்டுயானை விழுந்து கிடப்பதைக் கண்ட விவசாயி கிராம சேவையாளருக்குத் தகவல் கொடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குக் காலை 10.00 மணிக்குச் சென்ற முல்லைத்தீவு மாவட்ட வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கனரக இயந்திரங்கள் கொண்டு யானையினை கிணற்றிலிருந்து மீட்டுள்ளார்கள்.
அலியன் எனப்படும் தனியானையே இவ்வாறு கிணற்றுக்குள் வீழ்ந்துள்ளது.
ஒதியமலை கிராமத்தில் யானைவேலி இல்லாத நிலையில் நாளாந்தம் காட்டுயானையால்
விவசாய விளை நிலங்கள் அழிக்கப்படுவதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.


முதல்வர் விஜயை குடும்பத்துடன் சந்தித்த நடிகை சினேகா! வெளியிட்டுள்ள உணர்வுபூர்வ பதிவு வைரல்! Manithan
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
தமிழ்ப்பட நடிகைக்கு ரூ.100 கோடியில் வீடு: 51 வயதில் பல கோடி மதிப்புள்ள சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியது எப்படி? News Lankasri