வாழைச்சேனை நகருக்குள் புகுந்த காட்டு யானையால் பரபரப்பு! பெண் ஒருவர் பலி - மூவர் படுகாயம்
மட்டக்களப்பு, வாழைச்சேனை நகருக்குள் புகுந்த காட்டு யானை ஒன்று நடத்திய தாக்குதலில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.
இன்று வெள்ளிக்கிழமை(13.02.2026) அதிகாலை வேளையில் ஊருக்குள் நுழைந்த இந்த யானை, வீதிகளில் சென்றவர்கள் மீதும் குடியிருப்புகள் மீதும் திடீர் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
ஆதார வைத்தியசாலையில் அனுமதி
இதில் படுகாயமடைந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
காயமடைந்த மற்றவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நகரப் பகுதிக்குள் யானை புகுந்ததால் பொதுமக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர்.
காட்டுயானைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராமங்களுக்குள் மாத்திரமின்றி நகர் பகுதிகளுக்குள்ளும் ஊடுருவி தாக்கி வருகின்றமை மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
வாகனத்தின் மீது நடத்தப்பட வேண்டிய துப்பாக்கிப் பிரயோகம் உயிரைப் பறித்தது எப்படி : அல்லைப்பிட்டி விவகாரம் தொடர்பில் வலுக்கும் சர்ச்சை
உள்நாட்டில் கடும் நெருக்கடி... இந்தியாவில் செயல்படத் தொடங்கிய பிரித்தானியப் பல்கலைக்கழகங்கள் News Lankasri
AI தாக்கத்திற்கு தயாராகுங்கள்... அல்லது வெளியேறலாம்: ஊழியர்களுக்கு கூகிள் வலியுறுத்தல் News Lankasri