நாட்டின் பல பகுதிகளில் சிறப்பாக இடம்பெற்ற பட்டிப்பொங்கல்
பட்டிப்பொங்கல் (மாட்டுப்பொங்கல்) என்பது தைப்பொங்கல் நாளின் மறுநாள் தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும்.
இது பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது.
மக்களின் வாழ்வில் ஒன்றிய காளைகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும் கொண்டாடப்படுகிறது.
திருகோணமலை
தமிழர்களின் தைத்திருநாளான தைப்பொங்கலுக்கு மறுநாள் பட்டிப்பொங்கல் கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில் இன்று (16.01.2026) பட்டிப்பொங்கல் தம்பலகாமத்திலும் சிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது உழவர்களுக்கு உதவும் மாடுகள் நீராட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டு பூசை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.


மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உழவர்களின் இல்லங்களிலும், ஆலயங்களிலும் பசுக்கள் பட்டு வஸ்திரங்கள், பூ மாலைகளினால் அலங்கரிக்கப்பட்டு மாட்டு பட்டிகளிலும் இல்லங்களிலும் பட்டிப்பொங்கல் பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.
ஈழத்து திருச்செந்தூர் என போற்றப்படும் மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் இன்று (16.01.2026) காலை பட்டிப்பொங்கல் விழா சிறப்பாக இடம்பெற்றது.
மக்களின் வாழ்வில் ஒன்றாக கலந்த பசுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், பசுக்களை வணங்கி வழிபடும் நாளாக இது கருதப்படுகிறது.
இவ்வாலயத்தில் பசுக்கள் அலங்கரிக்கப்பட்டு பொங்கல் பொங்கப்பட்டு பசுக்களுக்கு பூஜைகள் நடைபெற்றன.
ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ கு.சிற்சபேசன் தலைமையில் இந்த வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டதுடன் பெருமளவான அடியார்களும் கலந்து கொண்டனர்.


செய்தி - குமார்
முல்லைத்தீவு
பட்டிப்பொங்கல் இன்றைய தினம் (16) முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் சிறப்பாக நடைபெற்றது.
முதலில் மாடுகள் கட்டும் தொழுவத்தினைச் சுத்தம் செய்து கொள்வார்கள். கால்நடைகளை குளிப்பாட்டி சுத்தம் செய்வார்கள். மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு பளபளக்கும் வகையில் வண்ணம் பூசி, கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டிவிடுவார்கள்.
கழுத்துக்கு தோலிலான வார் பட்டையில் சலங்கை கட்டி அழகு படுத்துவார்கள். திருநீறு பூசி குங்குமப் பொட்டிட்டும் புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும் தயார் செய்வார்கள்.
உழவுக்கருவிகளை சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைப்பார்கள். விவசாயத்தில் பயன்படுத்தப்படும் அனைத்துக் கருவிகளையும் இதேபோல செய்வார்கள். தாம்பாளத் தட்டுகளில் தோட்டம் காடுகளில் விளைந்த பயிர், பச்சைகளை வைத்தும் தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என எல்லாம் பூஜைக்காக எடுத்து வைப்பார்கள்.
தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி கற்பூர தீபாராதனை காட்டப்படும். இதன் பின் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் கொடுப்பார்கள். தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் சல்லி காசுகளை அணிந்த ஏறுகளைத் தழுவும் ஜல்லிக்கட்டு விளையாட்டு இந்நாளில் நடைபெறும்.
செய்தி - தீசன்








சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 2 நாட்கள் முன்
இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாம் உலகப்போர்க்கால குண்டுகள்: 5,000 பேர் வெளியேற்றம் News Lankasri