சிறை கைதிகளுக்கு ஒரு வார விடுமுறை - அலி சப்றி
சிறைத்தண்டனை அனுபவித்து வரும் சிறந்த நடத்தைகளை கொண்ட கைதிகளுக்கு “ஒரு வாரக் காலம் விடுமுறை வழங்கும்” சட்டத்தை எதிர்காலத்தில் அமுல்படுத்த எதிர்பார்த்துள்ளதாக நீதியமைச்சர் அலி சப்றி (Ali Sabri) தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலைகள் சட்டத்திற்கு அமைய அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு உட்பட்டு இந்த சட்டத்தை அமுல்படுத்த தேவையான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வெலிகடை சிறைச்சாலையின் கூரை மீது எறி தம்மை விடுதலை செய்யுமாறு உணவு தவிர்ப்பில் ஈடுப்பட்ட கைதிகள் சம்பந்தமாக ஆராய நேற்று சிறைச்சாலைக்கு சென்றிருந்த போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கும் போது அனைத்து கைதிகளுக்கும் ஒரே நடைமுறையை கையாள்தல், தண்டனை அனுபவித்து வரும் கைதிகளின் நன்னடத்தை அடிப்படையில் தண்டனையை குறைத்தல், போன்ற விடயங்கள் குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட கைதிகளுடன் கலந்துரையாடியதாக நீதியமைச்சு குறிப்பிட்டுள்ளது.

திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

வெளியேறிய நடிகை, ஆனால் மகாநதி சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஸ்பெஷல் நியூஸ்... என்ன தெரியுமா? Cineulagam
