ஊடகவியலாளர் பிரகீத்தை நினைவுகூர்ந்து காணாமல்போனவர்களுக்காக ஓர் இணையதளம்

Website
By Independent Writer Jan 27, 2021 12:34 AM GMT
Report

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டு 11 வருடங்கள் கடந்துள்ளன. இந்நிலையில், அந்த விடயத்தை முன்னிட்டு www.ekneligodaforum.org என்ற பெயரில் இணையதளம் ஒன்றை, அறிமுகப்படுத்துவதற்கு "எக்னெலிகொட மன்றம்" நடவடிக்கை எடுத்துள்ளது.

ஜனவரி 25, 2021 திங்கள், மாலை 4 முதல் 6 மணிவரை, பொரளை, டொக்டர் எம்.எம் பெரேரா அரங்கில் இணையதள அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

"அந்த மனித முன்னோடியை எங்களிடமிருந்து பிரித்து 11 வருடங்கள் ஆகின்றன!" இதுவே இணையதளத்தின் தொனிப்பொருள். கடந்த 11 வருடங்களாக காணாமல்போயுள்ள எக்னெலிகொடவிற்கு நீதியைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் தான் முன்னெடுத்த அனைத்து முயற்சிகள் மற்றும் செயற்பாடுகளையும், பிரகீம் இலங்கையில் இருந்த காலத்தில் எழுதிய கட்டுரைகள், வரைந்த ஓவியங்கள் என அனைத்தையும் சேர்த்து இந்த இணையதளத்தை உருவாக்கியுள்ளதாக பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியும், சர்வதேச அளவில் புகழ்பெற்ற மனித உரிமை ஆர்வலருமான சந்தியா எக்னெலிகொட தெரிவித்துள்ளார்.

இலங்கையில் காணாமல் போன சிங்கள, தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் பற்றிய தகவல்களும் இணையதளத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக சந்தியா எக்னலிகோடா மேலும் குறிப்பிடுகிறார்.

நாடு கொரோனா தொற்று நோயை எதிர்கொண்டுள்ள நிலையில், இணையதள அறிமுக நிகழ்விற்கு ஏராளமானவர்களை பங்கேற்கச் செய்வது கடினம் என்பதால், அன்றைய தினம் பேஸ்புக் மூலமான நேரடி ஒளிபரப்பில் இணைந்துகொள்ளுமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட பற்றி ஆராய்பவர்கள் மற்றும் காணாமல் போனவர்கள் குறித்த தகவல்களைத் தேடுவோர் இந்த இணையதளத்தை பயன்படுத்திக்கொள்ள முடியுமென சந்தியா எக்னெலிகொட குறிப்பிட்டுள்ளார்.

”உலகத்திலிருந்து காணாமல் ஆக்கப்பற்றவர்களைப் பற்றிய நினைவலைகளை எழுதும் – எழுப்பும் - பாதை” வெளியீட்டின் போது ஒன்றிணையுமாறு அவர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட ஜனவரி 24, 2010 அன்று பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டார்.

காணாமல் போன தனது கணவரைத் தேடும் முயற்சியில் சந்தியா எக்னெலிகொட உலகின் மிக உயர்ந்த விருதையும் பெற்றார். இலங்கையில் போரின் போதும் காணாமல்போன ஆயிரக்கணக்கான உறவினர்கள் மற்றும் மோதலுக்கு முன்னரான கலவரங்களின் போதும் காணாமல்போன ஆயிரக்கணக்கானவர்களின் அடையாளமாக மாறிய பெண்ணான சந்தியா எக்னெலிகொடவுக்கு 2017ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்காவினால் சர்வதேச வீரதீர பெண் விருது வழங்கப்பட்டது.

காணாமற்போன தனது கணவர் பிகீத் எக்னெலிகொட பற்றிய உண்மையை வெளிப்படுத்த அதிகாரிகள் தடையாக இருந்த போதிலும், 80 தடவைகளுக்கு மேல் நீதிமன்றத்திற்கு செல்வதில் அவர் காட்டிய தைரியம் காரணமாகவே அவர் இந்த விருதுக்கு தெரிவு செய்யப்பட்டதாக அமெரிக்க உதவி வெளி விவகார செயலாளர் தோமஸ் ஏ செனொன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
நன்றி நவிலல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், கொழும்பு, Toronto, Canada

23 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கனடா, Canada

29 Nov, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US