வாகன உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கையில் பொது இடங்கள், நடைபாதைகள், தனியார் பாதைகளில் மற்றும் பாதுகாப்பான இடத்தில் வாகனத்தை நிறுத்தும் போது அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வாகனம் நிறுத்தப்பட்ட இடங்களில் வாகனங்களில் இருந்து எரிபொருள் திருடப்படுவதாக தெரியவந்துள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு 03 இல் வாகனம் நிறுத்திய பின்னர் காரில் இருந்து பெட்ரோல் திருடப்பட்டதால் பாதிக்கப்பட்டவர் ஒருவர் பேஸ்புக் மூலம் பதிவொன்றை பதிவிட்டு எச்சரித்துள்ளார்.
கடுமையான பெட்ரோல் வாசனை
“நாங்கள் முதலில் நாவல எரிபொருள் நிரப்பு நிலையத்தில் முழு தொட்டியையும் நிரப்பினோம். பின்னர் 5 ஆம் திகதி சாப்பிடுவதற்காக கடைக்கு சென்றோம்.
நிறுத்துமிடத்தில் வாகனங்கள் நிரம்பியதால் பாதைக்கு அருகில் உள்ள வீதியில் நிறுத்தினோம். சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, நாங்கள் வாகனத்திற்கு திரும்பினோம்,
கடுமையான பெட்ரோல் வாசனை இருப்பதைக் கவனித்தோம். உள்ளே நுழைந்து காரை ஓட்ட ஆரம்பித்த போது எரிபொருள் மீட்டர் கிட்டத்தட்ட வெறுமையாக இருந்தது.
நாங்கள் காரின் வெளியே சோதனை செய்தோம், ஒரு கத்தி மற்றும் பெட்ரோல் வடித்த தடங்கள் காணப்பட்டது.
காரில் கொள்ளை
நாங்கள் காரை வேறொரு எரிபொருள் நிலையத்திற்கு கொண்டு சென்றோம், அங்கு சரிபார்த்ததில், எரிபொருள் குழாய் அடியில் இருந்து பெட்ரோல் வெளியேற்றப்பட்டதை கவனித்தோம்.
இதுபோன்ற பல சம்பவங்கள் வெளிப்படையாகவே நடந்துள்ளதென வாகனத்தை சரிப்பாத்தவர் தெரிவித்துள்ளார்.
எனவே வாகனத்தை நிறுத்தும் போது கவனமாக இருங்கள். வாகனம் பாதுகாப்பாக இருக்கும் என்று நாங்கள் கருதினோம், ஆனால் அவ்வாறான பாதுகாப்புகள் இல்லை” என பாதிக்கப்பட்டவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருடன் சிறகடிக்க ஆசை கோமதி பிரியாவிற்கு திருமணம்? யார் அந்த நடிகர் தெரியுமா Cineulagam

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

பிடிவாதத்தால் எதையும் சாதிக்கும் பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
