தமிழ் தேசிய அரசியல் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை
தமிழ் தேசிய அரசியலில் தமிழர்களின் வாக்கு சிதவடையும் நிலை காணப்பட்டால் எமது பிரதிநிதித்துவம் இல்லாமல் போய்விடும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அருண் தம்பிமுத்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பில்(03.010.2024) வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் தேசிய அரசியல்
“தமிழ் தேசிய இனத்தின் அரசியல் ஒரு பேராபத்தான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது.

தமிழ் மக்களிடையே பொதுவாக பேசப்படும் கருத்து நாங்கள் எல்லாம் ஒன்றிணைந்து, தமிழ் அரசியல் தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து என்பதே.
முக்கியமாக கடந்த ஜனாதிபதி தேர்தலில் தென்பகுதியில் மக்கள் எடுத்த முடிவை சற்று பார்க்க வேண்டும். தமிழர்கள் எப்படி வாக்களித்தார்களோ சிங்களவர்கள் ஒரு தெளிவான நிலை எடுத்திருந்தார்கள்.
பல கட்சிகள் ஒன்றிணைந்து கேட்ட வேட்பாளர்களை விட தனித்துவமாக போட்டியிட்ட அநுரகுமார திசநாயக்க அதிக வாக்குகளை சிங்கள மக்கள் கொடுத்திருந்தார்கள்” என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri
பச்ச குழந்தை விஜய்க்கு என்ன தெரியும்? 40 வயது த்ரிஷா தான் தவறு... தாறுமாறாக கலாய்த்த மருத்துவர்! Manithan