யாழில் மக்களிடம் பிடிப்பட்ட வன்முறைக் கும்பல்
யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை, மெலிஞ்சிமுனை பகுதியில் தாக்குதல் நடாத்துவதற்கு சென்ற வன்முறைக் கும்பல் ஒன்றை அப்பகுதி மக்கள் மடக்கிப் பிடித்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று(04.04.2024) இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் விசாரணை
பாடசாலை ஒன்றில் கல்வி கற்ற 2012 ஆம் ஆண்டு உயர்தரப் பிரிவு மாணவர்கள் வாட்ஸப் சமூக ஊடகம் ஒன்றில் குழுவாக செயற்பட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் அந்த குழுவில் இருந்த, இருவருக்கிடையே முரண்பாடு ஏற்பட்டதையத்து முரண்பாட்டில் ஈடுபட்ட ஒருவரை தாக்குவதற்காக இன்னொருவர் வெளியில் இருந்து வன்முறைக் கும்பல் ஒன்றினை வரவழைத்துள்ளார்.
அந்தவகையில் ஆயுதங்களுடன் வந்த வன்முறை கும்பல் தாக்குதலை நடாத்த முயன்றவேளை அந்த பகுதியிலுள்ள மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு குறித்த கும்பலை மடக்கிப் பிடித்து ஊர்காவற்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan
