மோடியிடம் ஒன்றிணைந்த கோரிக்கை: சபா குகதாஸ் வேண்டுகோள்

Sri Lankan Tamils Sri Lanka Narendra Modi
By Kajinthan Jun 12, 2024 01:02 PM GMT
Report

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு (Narendra Modi) தமிழர் தரப்பு மீண்டும் ஒன்றிணைந்த கோரிக்கையை அனுப்ப வேண்டும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் இன்றையதினம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் குறித்த அறிக்கையில்,

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது தடவையாக பதவி ஏற்ற பின்னர்,  இந்திய வெளிவிகார அமைச்சர் ஜெய்சங்கருக்கும் ஐனாதிபதி ரணில் விக்ரமசிங்காவுக்குமான சந்திப்பில் கலந்துகொள்வதற்காக வரும் ஆகஸ்ட் மாதம் இலங்கை வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்கள் அற்ற இந்திய அமைச்சரவை : விமர்சனத்திற்குள்ளான மோடி அரசாங்கம்

முஸ்லிம்கள் அற்ற இந்திய அமைச்சரவை : விமர்சனத்திற்குள்ளான மோடி அரசாங்கம்

கசப்பான விடயங்கள்

தமிழர் தரப்பில் பிரதமர் மோடிக்கு தனித் தனியாக வாழ்த்துக்களை அனுப்பினாலும் வேறுபட்ட கோரிக்கைகளையும் வாழ்த்துடன் சிலர் இணைத்திருந்தமையை காண முடிந்தது.

கடந்த காலத்தில் பிரதமர் மோடிக்கு தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பினர். அதன் பின்னர் பாரதப் பிரதமர் மோடியை சந்திப்பதற்கான அழைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் குழுவினருக்கு இந்தியத் தரப்பால் அனுப்பப்பட்டது. அதற்கு அலட்சியமான காரணங்களை பொது வெளியில் கூறி சந்திப்பை தவிர்த்தனர். 

மோடியிடம் ஒன்றிணைந்த கோரிக்கை: சபா குகதாஸ் வேண்டுகோள் | A United Demand To Modi

இம்முறை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ்த் தேசியக் கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அமைப்புக்களும் இணைந்து மீண்டும் ஒரு கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை சகல அமைப்புக்களினதும் கையொப்பங்களுடன் அனுப்ப வேண்டும்.

வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஈழத் தமிழரின் பூர்வீக வாழ்விடம் என்பதை இலங்கை - இந்திய ஒப்பந்தம் மிக தெளிவாக குறிப்பிட்டுள்ளது. அதற்கான அரசியல் அதிகாரப் பகிர்வை பாரத தேசம் பெற்றுத் தருவதற்கான சூழலை தமிழர் தரப்பு ஒற்றுமையாக உருவாக்க வேண்டும்.

இலங்கைத் தீவில் ஐனாதிபதிக் கதிரையில் அமர்பவரை பெரும்பாலும் பிராந்திய, பூகோள நாடுகளே தீர்மானிக்கின்றன. அத்துடன், கடந்த காலத்தில் இந்திய இராஐதந்திர தரப்புக்கும் தமிழர் தரப்பிற்கும் ஏற்பட்ட கசப்பான விடயங்கள் இனியும் மீள் நிகழாது இருப்பதற்கு ஒற்றுமைக் கடிதம் காலத்தின் கட்டாயம்.

கோமாளித்தனமான அறிக்கைகள்

தென்னாசிய பிராந்தியத்தில் இந்தியா தனது வெளி விவகாரத்தில் ஏற்படும் அரசியல், இராஐதந்திர நெருக்கடிகளை முகம் கொடுக்க இலங்கை அரசை தங்கள் அரவணைப்பில் வைத்திருக்க வேண்டும் என இந்திய வெளிவிகார அமைச்சு கொள்கையளவில் தீர்மானித்துள்ளது.

இத்தகைய நிலையில், இந்தியாவின் முடிவுகளை தாண்டி மேற்குலக நாடுகள் தமிழர் விவகாரத்தில் பாரிய மாற்றங்களை கொண்டுவரக் கூடிய ஏது நிலைகள் தெளிவாக இல்லை. எனவே, ஆட்சியாளர்களின் அறிக்கைகளை விட பிராந்திய சர்வதேச அரசியல் இராஐதந்திர நீரோட்டங்களின் ஊடாகவே ஈழத் தமிழர்கள் தங்கள் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டும்.

மோடியிடம் ஒன்றிணைந்த கோரிக்கை: சபா குகதாஸ் வேண்டுகோள் | A United Demand To Modi

இந்திய ஆட்சியாளர்களையும் அதன் செயற்பாடுகளையும் குறுகிய கதிரை அரசியலுக்காக விமர்சிப்பதும் தனிப்பட்ட கட்சி அரசியலுக்காக கோமாளித்தனமான அறிக்கைகளும் தமிழ் இனத்தை மேலும் பலவீனப்படுத்திவிடும்.

எனவே, இனி வருகின்ற ஐந்து ஆண்டுகள் மோடி அரசே இந்திய மத்திய அரசாங்கமாக இருக்கப் போகிறது. அதனை சரியாக தமிழர் தரப்பு கையாள வேண்டும் - என்றுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளருடன் இரகசிய ஒப்பந்தத்திற்கு தயார்: பிரான்ஸில் சிறீதரன் பகிரங்கம்

ஜனாதிபதி வேட்பாளருடன் இரகசிய ஒப்பந்தத்திற்கு தயார்: பிரான்ஸில் சிறீதரன் பகிரங்கம்

வாக்காளர்கள் மத்தியில் எச்சரிக்கையான கருத்துக்களை பகிரும் ரணில்

வாக்காளர்கள் மத்தியில் எச்சரிக்கையான கருத்துக்களை பகிரும் ரணில்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US