வாழைச்சேனை பகுதியில் போதைப்பொருள் வர்த்தகர் ஒருவர் கைது
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிறைந்துரைச்சேனை பிரதேசத்திற்குக் கொண்டு வரத்தயார் நிலையிலிருந்த 2 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் மாவடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த போதைப்பொருள் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த வியாபாரி அவரது வீட்டில் வைத்து இன்று மாலை 06.30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய ஏறாவூர் பொலிஸ் நிலைய பொலிஸாரோடு இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த போதைப்பொருள் வர்த்தகரே அதிகளவான கேரளா கஞ்சா போன்ற போதைப்பொருட்களை பிறைந்துரைச்சேனை பிரதேசத்துக்கு விநியோகித்து வந்துள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
33 வயதுடைய இவரிடமிருந்து 2 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்த மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினரின் தொடர் நடவடிக்கை காரணமாக மாவட்டத்தின் தமிழ், முஸ்லிம் பிரதேசங்களில் போதை வியாபாரத்தில் ஈடுபடும் வர்த்தகர்கள் உட்படப் போதைப்பொருளுடன் தொடர்புபட்ட பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
அத்துடன் வெளிமாவட்டங்களிலிருந்து கல்குடா பிரதேசத்துக்குப் போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளைக் கடத்தி வருவோரும் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

அடம்பிடித்த அன்புக்கரிசி.. தயங்கி நிற்கும் அக்கா பாசம்- பேசாமல் ஒதுங்கிய குணசேகரன் குடும்பம் Manithan

நொருங்கிய கார்.. நிச்சயதார்த்தம் முடிந்த மூன்றே நாளில் விபத்தில் சிக்கிய விஜய் தேவரகொண்டா Cineulagam

குணசேகரன் தலைமையிலேயே பார்கவி-தர்ஷன் திருமணத்தை நடத்தும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது தெறி எபிசோட் புரொமோ Cineulagam
