இங்கிலாந்தில் மக்கள் மீது மோதிய சிற்றூர்ந்து: பயங்கரவாத செயலா என்பது குறித்து விசாரணை
இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் நடத்தப்பட்ட வெற்றி அணிவகுப்பின் போது மக்கள் மீது சிற்றூர்ந்து மோதியதில் 27 பேர் காயம் அடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் 53 வயதான இங்கிலாந்து நாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தில் பிரீமியர் லீக் கால்பந்து போட்டி நடைபெற்ற நிலையில், அதில் லிவர்பூல் அணி வெற்றி பெற்றது.
தீவிர விசாரணை
இதனையடுத்து அந்த அணியினர் நேற்று லிவர்பூல் நகரில் வெற்றி அணிவகுப்பை நடந்தினர்.
இதன்போதே, அணிவகுப்பின் மீது சிற்றூர்ந்து ஒன்று மோதியுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த இரண்டு பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில் குறித்த சம்பவம் பயங்கரவாதத்துடன் தொடர்பு கொண்டதா என்பது குறித்து அந்த நாட்டின் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.





Ethirneechal: அறிவுக்கரசியை சின்னாபின்னமாக்கிய தர்ஷினி! ஈஸ்வரியின் போனை கைப்பற்றிய மருமகள்கள் Manithan

மறைந்த தொகுப்பாளர் ஆனந்த கண்ணனுக்காக சூப்பர் சிங்கர் மேடையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்... வீடியோ இதோ Cineulagam

உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri
