இலங்கையின் ஜனாதிபதி பதவிக்கு ஆசைப்படும் தமிழ் அரசியல்வாதி
அரசியலமைப்பில் வாய்ப்புக்கள் இருந்தால் இந்த நாட்டின் ஜனாதிபதியாக ஆவதற்கும் எனக்குத் தகுதிகள் உண்டு. இதனை நான் பகிரங்கமாக அறிவிக்கின்றேன் என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கலந்து கொண்டு தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதியாகும் தகுதி எனக்கு உண்டு
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் அமைச்சரவை மாற்றத்தின்போது சந்தர்ப்பம் வழங்கப்படுமானால், நான் பிரதியமைச்சராகவோ அல்லது ராஜாங்க அமைச்சராகவோ பதவி ஏற்க மாட்டேன். அமைச்சராவதுதான் எனது முடிவு.
அதைவிட, இலங்கையின் அரசியல் யாப்பு மாறியிருந்தது என்று சொன்னால், நான் நாட்டின் ஜனாதிபதி பொறுப்பை வகிக்கவும் தகுதியானவன்தான்.
இந்த நாட்டின் ஜனாதிபதியாக செயற்படுவதற்கும் எனக்குத் தகுதி உண்டு. அதனை வெளிப்படையாகவும், பகிரங்கமாகவும் தெரிவித்து கொள்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 1 மணி நேரம் முன்

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
