யாழ்.உணவகங்களில் நடத்தப்பட்டுள்ள திடீர் பரிசோதனை(Photo)
யாழ்ப்பாணம் மாநகரில் உள்ள உணவகங்களில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இன்று நடத்திய திடீர் பரிசோதனை நடவடிக்கையில் தீங்கு விளைவிக்கும் உணவுப் பொருட்கள் அழிக்கப்பட்டதுடன் சுகாதார சீர்கேடுகள் தொடர்பிலும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையின் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மாநகரில் அமைந்துள்ள உணவகங்களில் திடீர் பரிசோதனக்களை முன்னெடுத்துள்ளனர்.
நீதிமன்றம் ஊடாக நடவடிக்கை
குளிர்சாதனப் பெட்டியில் சுகாதார சீர்கேடாகவும் தீங்கு விளைவிக்கும் வகையில் வைத்திருக்கப்பட்ட மீன், இறைச்சி உள்ளிட்ட உணவுப் பொருள்கள் அழிக்கப்பட்டுள்ளன.
மேலும் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான நிற ஊட்டிகளை கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுப் பொருள்களும் அழிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் உணவகம், ஊழியர்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பில்
எடுத்துரைத்ததுடன் இரண்டு வாரங்களுக்கு அனைத்தும் சீர் செய்யப்படாவிடின்
நீதிமன்றம் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவக உரிமையாளர்கள்
எச்சரிக்கைப்பட்டுள்ளனர்.

பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் மருமகளுக்கு குழந்தை பிறந்தது.. நடிகை வெளியிட்ட மகிழ்ச்சியான வீடியோ Cineulagam

11வது வருட திருமண நாள், மிர்ச்சி செந்தில் வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ... வாழ்த்தும் ரசிகர்கள் Cineulagam

எங்கள் நாட்டில் உன்னை பணக்காரர் ஆக விடமாட்டேன்: புலம்பெயர்ந்தோர் ஒருவர் ஜேர்மனியில் சந்தித்த அதிர்ச்சி News Lankasri
