சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் திடீர் தாக்குதல்: 23 பேர் பலி
சிரியாவில் ராணுவ வீரா்கள் சென்று கொண்டிருந்த பேருந்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 23 போ் உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவிக்கையில்,
கடந்த (10.08.2023) ஆம் திகதி டெயிா் அல்-ஸூா் மாகாணத்தில் ராணுவ வீரா்களை ஏற்றிக் கொண்டு பாலைவனச் சாலை வழியாக சென்று கொண்டிருந்த பேருந்து மீது திடீரென இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினா்.
பயங்கரவாத தாக்குதல்கள்
இதில் 23 வீரா்கள் உயிரிழந்தனா்; 20 போ் காயமடைந்தனா் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
சிரியாவிலும், ஈராக்கிலும் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியிருந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் 2019 ஆம் ஆண்டு தோற்கடிக்கப்பட்டனா்.
எனினும், அவா்கள் பொதுமக்களிடையே மறைந்திருந்து அவ்வப்போது பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |



