புதுக்குடியிருப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை!
புதுக்குடியிருப்பு உடையார்கட்டு பகுதியில் பாவனைக்கு உதவாத 30 கிலோகிராம் மாட்டு இறைச்சி பொதுச் சுகாதார பரிசோதகர்களால் கைப்பற்றப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட உடையார்கட்டு பகுதியிலுள்ள சந்தையில் திடீரென இன்றையதினம் (09.04.2025) சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடுமையான எச்சரிக்கை
இதன்போது பாவனைக்குதவாத வகையில் இருந்த மாட்டு இறைச்சி பொது சுகாதார பரிசோதகர்களால் கைப்பற்றப்பட்டு, கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் உரிமையாளரின் அனுமதியுடன் எரித்து அழிக்கப்பட்டிருந்தது.

குறித்த சோதனை நடவடிக்கையில் விசுவமடு சுகாதார பரிசோதகர் சந்திரமோகன், வள்ளிபுனம் பொது சுகாதார பரிசோதகர் றொஜிஷ்ரன் , கோம்பாவில் பொது சுகாதார பரிசோதகர் சுரேஸ் ஆனந்தன், புதுக்குடியிருப்பு பொது சுகாதார பரிசோதகர் கோகுலன் ஆகியோரும் குறித்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.



3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri
காயத்ரி பிரச்சனை முடிந்ததும் சோழனை தனியாக அழைத்துச்சென்று நிலா சொன்ன விஷயம்... அய்யனார் துணை சீரியல் அடுத்த கதைக்களம் Cineulagam