ஓமந்தையில் 12 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை! வைத்திய பரிசோதனையில் வெளிவந்த தகவல்
வவுனியா, ஓமந்தை குஞ்சுக்குளம் பகுதியினை சேர்ந்த 12 வயதான பாடசாலை மாணவியொருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 32 வயதான குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஓமந்தை, குஞ்சுக்குளம் பகுதியை சேர்ந்த குறித்த மாணவிக்கு நேற்றையதினம் திடீர் சுகவீனம் ஏற்பட்ட நிலையில் வவவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இதன்போது குறித்த மாணவி நான்கு மாதங்கள் கர்ப்பம் தரித்துள்ள விடயம் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
மாணவியிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன் அவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் மாதர்பனிக்கர் குளம் பகுதியை சேர்ந்த ஒருபிள்ளையின் தந்தையான 32 வயது குடும்பஸ்தரை கைது செய்துள்ளனர்.
குறித்த நபரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார்
விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.
முதலாம் இணைப்பு
வவுனியா - ஓமந்தை, குச்சுக்குளம் பகுதியினை சேர்ந்த 12 வயதும் 6 மாதங்களும் ஆன பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த மாணவிக்கு நேற்றையதினம் (26) வயிற்றுக்குத்து ஏற்பட்ட நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வைத்தியர்கள் மாணவியினை சிகிச்சைக்குட்படுத்திய போதே மாணவி கர்ப்பம் அடைந்த விடயம் தெரியவந்துள்ளது.
அதனையடுத்து, வைத்தியர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியமையிருந்தனர்.
மாணவியிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த சமயத்தில் தன்னை ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளதாக மாணவி வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் குறித்த நபரை கைது செய்வதற்குரிய நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருவருகின்றனர்.
குறித்த மாணவி சிகிச்சைகளுக்காக தொடர்ந்தும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam
