ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமைக்கு நீதி கிடைக்க வேண்டும்: வவுனியா ஊடக அமையம் வலியுறுத்து
இலங்கையில் நான்கு ஊடகவியலாளர்கள் மீது பாதுகாப்பு தரப்பினர் மேற்கொண்ட தாக்குதலுக்கு நீதியான விசாரணைகள் இடம்பெற வேண்டும் என வவுனியா ஊடக அமையம் வலியுறுத்தியுள்ளது.
சக்தி மற்றும் சிரச ஊடக வலையமைப்பின் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் வவுனியா ஊடக அமையம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து மக்கள் தன்னெழுச்சியாக கோட்டா அரசாங்கத்திற்கு எதிராக போராடி வருகின்றனர்.
ஊடக அறிக்கை
அதன் ஒரு கட்டமாக நேற்றைய தினம் (09) ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, பிரதமரின் வீடு என்பன மக்களால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தின் போது ஜனநாயகத்தின் நான்காவது தூணாக களத்தில் நின்று மக்களுக்கு உண்மை நிலையை வெளிக்கொண்டு வந்த ஊடகவியலாளர்கள் மீது மிலேச்சத்தனமாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது.
சக்தி, சிரச ஊடக வலையமைப்பின் ஊடகவியலாளர் நால்வரும் தாம் ஊடகவியலாளர் என வெளிப்படுத்திய பின்னரும், பொலிஸாரும், விசேட அதிரடி படையினரும் இணைந்து காட்டு மிராண்டித்தனமாக தாக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.
யுத்த காலத்திலும், யுத்தத்திற்கு பின்னரும் இந்த நாட்டில் கருத்து சுதந்திரத்திற்கு இடமளிக்காது ஆட்சியாளர்கள், ஆயுத முனையில் அதனை அடக்கி ஆழ முற்பட்டு வருகின்றனர்.
யுத்தம் முடிவடைந்து 13 ஆண்டுகள் கடந்த நிலையிலும் ஊடகம் அடக்கு முறை என்பது தொடர்கின்றது என்பதை இந்த சம்பவம் படம் போட்டு காட்டுகின்றது.
தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர்கள் விரைவில் நலன்பெற இறைவனை வேண்டுகின்றோம்.
ஊடகவியலாளர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் உடனடியாக நீதியான விசாரணைகள் இடம்பெற வேண்டும்.
மேலும், சம்மந்தப்பட்ட பாதுகாப்பு தரப்பினர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு பாதிக்கப்பட்ட நான்கு ஊடகவியலாளர்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என வவுனியா ஊடக அமையம் வலியுறுத்துகிறது.
கோரிக்கை
இலங்கையில் கடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள், ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டமை, ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டமை தொடர்பிலும் நீதியான ஒரு விசாரணை இடம்பெற வேண்டும்.
சர்வதேச சமூகமும், ஓட்டு மொத்த ஊடக அமைப்புக்களும் அதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
குற்றவாளிகள் தண்டிக்கப்படும் இடத்தில் மட்டுமே இவ்வாறான சம்பவங்கள் மீள நிகழாமையை உறுப்படுத்த முடியும்.
ஜனநாயகத்தின் நான்காவது தூணாகிய ஊடக சுதந்திரமும் பாதுக்காக்கப்படும் என ஊடக அமையம் நம்புகின்றது” என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க ஊடக நிறுவனங்களை தாக்கும் முயற்சியில் போராட்டக்காரர்கள் |

காஷ்மீர் விவகாரத்தில் யாரும் மத்தியஸ்தம் செய்ய தேவை இல்லை - டிரம்ப் கோரிக்கையை நிராகரித்த மோடி News Lankasri

1000 ஆண்டுகளுக்கு பிறகு காஷ்மீர் பிரச்சினையில்.. - டிரம்ப் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு News Lankasri

ட்ரம்பால் அறிவிக்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் போர்நிறுத்தம்: பிரதமரிடம் விளக்கம் கேட்கும் எதிர்க்கட்சிகள் News Lankasri
