இந்திய படகின் மூலம் நாட்டுக்கு வந்த போதைப்பொருள் கடத்தல்காரரான இலங்கையர் கைது
இந்திய கடற்றொழிலாளர் படகு மூலம் புத்தளம் - வென்னப்புவ தல் தேகா (கடவத்தை) கடற்கரைக்கு வந்த இலங்கை நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை கடற்படை மற்றும் பொலிஸாரின் ஒருங்கிணைந்த நடவடிக்கையின் போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது நடவடிக்கை
கடற்படைப் புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் வென்னப்புவ பொலிஸார், தல் தேகா கடற்கரையில் இரகசியமாக இறங்க முற்பட்ட குறித்த நபரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர், கடந்த 2021 ஆம் ஆண்டு இந்தியாவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், வென்னப்புவ பொலிஸார் சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், இந்திய கடற்றொழிலாளர் படகிற்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

தமிழ் தலைவர்கள் பெற்றது எதுவுமில்லை ஆயினும் வாய்ச் சொல்லில் வீரரடி..! 10 நிமிடங்கள் முன்

துபாயில் இந்தியர்களை வாளால் வெட்டிக்கொன்ற பாகிஸ்தானியர்: அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள் News Lankasri

6 நாள் முடிவில் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? Cineulagam

சவுதி தூதருடன் தொடர்பு.,ஊடகங்களில் பரவிய வீடியோ: பங்களாதேஷ் மாடல் மேக்னா ஆலம் அதிரடி கைது! News Lankasri

Optical illusion: உங்கள் கண்களை ஒரு நிமிடம் குருடாக்கும் மாயை...இதில் இருக்கும் இலக்கம் என்ன? Manithan
