லண்டன் மாநகரில் புலம்பெயர் தமிழர்களுக்கு விளையாட்டு விழா
பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழ்ந்துவரும் மல்லாவி மற்றும் மாந்தை கிழக்கு பிராந்தியத்தை சேர்ந்த தமிழ் மக்கள் சார்பில் விளையாட்டு விழா ஒன்று நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது மல்லாவி ஒன்றியத்தினால் 8ஆவது ஆண்டாக நடத்தப்படும் மாபெரும் கோடைகால விளையாட்டுப்போட்டியாகும்.
இந்த போட்டி எதிர்வரும் (25/06/2023) ஆம் திகதி மேற்கு லண்டனிலுள்ள ஹரோ பகுதியில் (Bannister outdoor sports centre, Uxbridge Rd, Harrow, HA3 6SW) நடத்த ஏற்பாடுகளைச் செய்துள்ளதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் அறியத்தந்துள்ளனர்.
இவ்விளையாட்டு விழாவில் ஆண், பெண், சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கான போட்டிகள் என பல்வேறுபட்ட விளையாட்டுக்கள் நடைபெறவுள்ளது.
அத்தோடு போட்டிகள் அனைத்தும் காலை 10 மணிமுதல் மாலை 8மணி வரை நடைபெறவுள்ளது.
மேலும் இந்த விழாவில்,
》நூற்றிற்கு மேற்பட்ட போட்டிகள் ஒரே நாளில் ஒரே இடத்தில்.
》மண் மணம் மாறாத தாயக உணவு விருந்து.
》தலையணைச் சண்டை, கயிறுழுத்தல், கிளித்தட்டு இன்னும் பல தாயக விளையாட்டுக்கள்.
》பெருந்தொகைப் பணப்பரிசில்களுடன் வெற்றிக்கேடயங்கள்.
》Bouncy castle, face painting, free medical camp.
》Entry Free / அனுமதி இலவசம்
》Car park Free / வாகனத்தரிப்பு இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு இவ்விளையாட்டு விழாவின் சிறப்பம்சமாக தமிழர் அணிகளுக்கிடையிலான மாபெரும் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி ஒன்றினையும் நடாத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இக்கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியானது 5A-side, 4A-side என இரு பிரிவுகளாக நடைபெறவுள்ளதுடன் 50 வயதிற்கு மேற்பட்ட கரப்பந்தாட்ட வீரர்களுக்கான போட்டியும் நடைபெறவுள்ளது.
இக்கரப்பந்தாட்டப் போட்டியில் வெற்றிபெறும் அணிகளுக்கு பணப்பரிசில்களுடள் வெற்றிபெறும் அணிக்களுக்கு வெற்றிக்கிண்ணங்களும், அணி வீரர்களுக்கான கிண்ணங்களுடன் போட்டி நாயகன் மற்றும் போட்டி தொடர் நாயகன் ஆகியோர்களுக்கான கிண்ணங்களும் வழங்கி கெளரவிக்கப்படவுள்ளனர்.
கரப்பந்தாட்ட போட்டிக்காக இதுவரை பிரித்தானியாவில் இயங்கிவரும் பல்வேறு கழகங்கள் தங்களைப் போட்டிக்காக பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.