டலஸ் தலைமையிலான அணியில் பிளவு
அரசாங்கத்தில் இருந்து விலகி எதிர்க்கட்சியில் சுயாதீனமாக செயற்பட்டு வரும் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தலைமையிலான அணி, கொள்கை ரீதியாக பிளவுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமது அணி அடுத்த தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பில் இந்த கொள்கை ரீதியான பிளவு ஏற்பட்டுள்ளது.
ஐ.மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைக்க வேண்டும் எனக்கூறும் ஒரு தரப்பு
எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒரு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் சிலர் விமல் வீரவங்சவின் தலைமையிலான கூட்டணியில் இணைந்து போட்டியிட வேண்டும் என கருத்து வெளியிட்டுள்ளனர்.
இதன் காரணமாக டலஸ் அழகப்பெரும தலைமையிலான அணியினர் எதிர்வரும் தேர்தலில் எந்த தரப்புடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என்ற தீர்மானத்தை எடுப்பதில் தாமதங்கள் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
