பண்டிகை காலத்தை முன்னிட்டு கட்டாயமாக்கப்பட்டுள்ள நடைமுறை
உணவு தயாரிக்கும் நிலையங்களில் உணவு தயாரிக்கும் நபர்களின் மருத்துவ அறிக்கைகளை பெற்றுக் கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பண்டிகை காலத்தை முன்னிட்டு கடைகளை பரிசோதிப்பதற்காக நாடளாவிய ரீதியில் 3000 பொது சுகாதார பரிசோதகர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பொது மக்கள் கொள்வனவு செய்யும் உணவுகள்
பொதுமக்கள் பண்டிகைக் காலத்திற்கான உணவுகளை வாங்க வரும்போது, அவர்களுக்கு உணவு தயாரிக்கக் கொடுக்கப்படும் பொருட்கள், பண்டிகைக் காலத்துக்காக தயாரிக்கப்படும் உணவு வகைகள், பழங்கள் போன்றவற்றைச் சரிபார்ப்போம்.
அதை பரிசோதகர்களுக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

மணமகனுக்கு ஹெலிகாப்டர், விருந்தினர்களுக்கு ரூ.2.5 கோடி மதிப்புள்ள பரிசுகள்.., திருமண செலவு எவ்வளவு தெரியுமா? News Lankasri
