இலங்கையில் நங்கூரமிடப்பட்ட தென்கொரிய போர் கப்பல்
தென்கொரிய கடற்படைக்கு சொந்தமான 'குவாங்கெட்டோ தி கிரேட்' என்ற போர்க்கப்பலானது இலங்கையை வந்தடைந்துள்ளது.
குறித்த கப்பலானது இன்று (26.10.2023)கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது.
தெற்காசிய பங்குதாரர்களுடன் தி இந்தோ-பசிபிக் மூலோபாயத்தின் கீழ் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் இலங்கைக்கு விஜயம் செய்வதாக தென் கொரிய கடற்படை தெரிவித்துள்ளது.
எதிர்ப்பு நடவடிக்கைகள்
அத்தோடு, இந்த கப்பல் கொரிய கடற்படையின் கடற்கொள்ளை எதிர்ப்பு பிரிவுக்கு சொந்தமானதுடன் கூட்டு பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் கப்பல்களின் பாதுகாப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு செயற்படுகின்றது.
தென் கொரிய போர்க்கப்பல் ஒன்று 6 வருடங்களுக்கு முன்பு கடைசியாக 2017 ஒக்டோபரில் இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த கப்பல் நங்கூரமிடப்படும் போது இலங்கைக்கான கொரிய தூதுவர் மற்றும் பலர் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.





மாகாணசபை கழுமரத்தில் சுமந்திரன் ஏறுவாரா..! 15 மணி நேரம் முன்

விக்ரம் ரோலக்ஸ் போல் கூலி படத்தில் சர்ப்ரைஸ் ஹீரோ கேமியோ.. மிரட்ட வரும் முன்னணி நடிகர்? யார் தெரியுமா Cineulagam

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27: அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள்..முதலிடத்தில் யார்? News Lankasri
