துறைமுக நகர சமஷ்டி அதிகாரம் கொண்ட தனிநாடு - லக்ஷ்மன் கிரியெல்ல
துறைமுக நகரம் என்பது தனியான சமஷ்டி அதிகாரங்களை கொண்ட பிரதேசம் போன்றது எனவும், அந்த பிரதேசம் சம்பந்தப்பட்ட நிதி அதிகாரங்கள் கூட நாடாளுமன்றத்திற்கு இல்லை எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள 25 சட்டங்கள் துறைமுக நகருக்குள் செல்லாது. இதனடிப்படையில் அது ஒரு தனிநாடு.
அரசின் நிதி நிர்வாகத்தை செய்வதில் இலங்கை மத்திய வங்கி, நிதி சபை மற்றும் நிதியமைச்சு என்பன பிரதான நிறுவனங்களாகும்.
இந்த மூன்று நிறுவனங்களும் துறைமுக நகரின் பணிப்பாளர் சபையில் இல்லை.இதன் மூலம் துறைமுக நகரத்தை ஒரு அணிக்கு தேவையான வகையில் நிர்வாகம் செய்ய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது தெளிவாகி இருக்கின்றது.
எவ்வாறாயினும் இந்த விடயம் தொடர்பாக எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில் விவாதம் ஒன்றை கோருவோம். அதன் ஊடக இந்த விடயங்களை நாட்டுக்கு வெளிப்படுத்துவோம் எனவும் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 13 மணி நேரம் முன்

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
