நாட்டிலுள்ள சிறுவர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை!
சிறுவர்களை தவறான நடத்தைகளுக்கு உட்படுத்தல் தொடர்பான வழக்கு விசாரணைகளை விரைவில் நிறைவு செய்வதற்காக புதிய வேலைத்திட்டங்களை தயாரிக்கவுள்ளதாக நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
சிறுவர்களை தவறான நடத்தைகளுக்கு உட்படுத்தும் சம்பவங்கள் தொடர்பில் சட்டமா அதிபரே வழக்கு தாக்கல் செய்வதாகவும் அவரது பணிக்குழாத்தில் ஆளணிப் பற்றாக்குறை நிலவுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வழக்கு விசாரணை
இந்நிலையில், சிறுவர்களை தவறான நடத்தைகளுக்கு உட்படுத்தல் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தில் தனியான பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் வழக்கு விசாரணைகளை விரைவில் முடிவுறுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் நீதியமைச்சர் ஹர்ஷன நாணாயக்கார நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.
இதேவேளை தவறான நடத்தைகளுக்கு உட்படுத்தல் இடம்பெற்ற தினத்திலிருந்து வழக்கு தாக்கல் செய்யப்படுவதற்கு சுமார் 05 வருடங்கள் செல்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
காலம் தாழ்த்தி வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு சாட்சி வழங்கப்படும் போது பாதிக்கப்பட்ட சிறுவர்களினால் சம்பவம் தொடர்பான முழுமையான தகவல்களை நினைவில் வைத்துக்கொள்ள முடியாத நிலை ஏற்படுமெனவும் அவ்வாறு இடம்பெறும் போது குற்றவாளிகள் தப்பிக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் காணப்படுவதாக நீதியமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 18 மணி நேரம் முன்

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam
