பாடசாலை மாணவியொருவர் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு (PHOTOS)
முல்லைத்தீவு - மாங்குளம் புதிய கொலணிப்பகுதியில் 14 வயது பாடசாலை மாணவி ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு - மாங்குளம் மகா வித்தியாலயத்தில் தரம் 9 இல் கல்வி கற்றுவரும் புதிய கொலணி மாங்குளத்தினை சேர்ந்த 14 வயதுடைய தயாபரன் தர்மினி என்ற பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவி வீட்டில் கிணற்றிற்கு அருகில் உள்ள கொய்யா மரத்தில் பழம் பறிக்க மரம் ஏறிய நிலையில், மரத்திலிருந்து தவறி கிணற்றிற்குள் விழுந்து உயிரிழந்துள்ளார்.
இவரது உயிரிழப்பு தொடர்பில் மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சம்பவ இடத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி எஸ்.சுதர்சன் சென்று பார்வையிட்டுள்ளதுடன், சடலத்தினை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பணித்துள்ளார்.
இதன்போது உயிரிழந்த சிறுமியின் சடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் நீதிமன்ற உத்தரவற்கு அமைய பெற்றோரிடம் வழங்கப்படவுள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாணவியின் உயிரிழப்பிற்கு பாடசாலை சமூகமும், தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.








தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

கரூரில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு - முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு News Lankasri
