சுவிஸிற்கு புலம்பெயர்ந்துள்ளவர்களின் பிள்ளைகள் குறித்து வெளியாகியுள்ள ஒரு தகவல்
பொதுவாகவே புலம்பெயர்ந்தோரின் பிள்ளைகள் தங்கள் பெற்றோரைவிட கல்வியில் சிறந்து விளங்குவதாக சுவிஸ் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
சுவிஸ் ஊடகம் ஒன்று சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், 24,000 புலம்பெயர்ந்தவர்களின் கல்வித்தரம், அவர்களுடைய பிள்ளைகளின் கல்வித்தரத்துடன் ஒப்பிடப்பட்டது.
குறிப்பாக, ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, போர்ச்சுகல், ஸ்பெயின், துருக்கி, செர்பியா, மாசிடோனியா மற்றும் கொசோவா ஆகிய நாடுகலிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்ந்தவர்களின் தரவுகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன.

அப்போது, பிள்ளைகள், தங்கள் பெற்றோரைவிட கல்வியில் மேம்பட்டிருந்தது தெரியவந்தது. உதாரணமாக, புலம்பெயர்ந்தோர் 15 அல்லது 16 வயதில் பள்ளிப்படிப்பை விட்டிருந்த நிலையில், அவர்களுடைய பிள்ளைகளோ, 18 அல்லது 19 வயது வரை கல்வி கற்றிருந்தார்கள்.
அதாவது, கிட்டத்தட்ட 60 சதவிகித பிள்ளைகள் இரண்டாவது மட்ட கல்விப்படிப்பை முடித்திருந்தார்கள். 32 சதவிகித பிள்ளைகள் பல்கலைக்கழகக் கல்வியையே முடித்திருந்தார்கள்.
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam