ஐ.நா அமர்வில் இலங்கை மீதான வாக்கெடுப்பு விரைவில் நடத்தப்படலாம் - தினேஷ் குணவர்தன
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீதான தீர்மானம் குறித்த வாக்கெடுப்பு எதிர்பார்த்த திகதிக்கு முன்னதாகவே நடத்தப்படும் என்று எதிர்பார்ப்பதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அமர்வுகள் அடுத்தடுத்து நடைபெறுவதால் இது இன்னும் திட்டமிடப்படவில்லை. இந்த நிலையில், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் வரைபு தொடர்பில் இன்னும் இணக்கம் ஏற்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
அமர்வின் போது இதுவரை 21 நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக பேசியுள்ளன. இது ஒரு சாதனையாகும். எனினும் இங்கிலாந்து தலைமையிலான முக்கியக் குழுமத்தின் தீர்மானம் முற்றிலுமாக ரத்து செய்யப்பட வேண்டும் என்பதையே இலங்கை அரசாங்கம் விரும்புகிறது என்று தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
உறுப்பு நாடுகளுக்கு தங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்க இலங்கை அரசாங்கம் அயராது உழைத்தது, எனினும் மேற்கத்திய நாடுகள் ஐக்கிய நாடுகளின் அமர்வில் இலங்கை குறித்து எதிர்மறையான நிலைப்பாட்டை எடுத்துள்ளன.
மனித உரிமைகள் பேரவையின் சில நடவடிக்கைகள் நியாயமானவை அல்ல, ஏனெனில் பேரவை பரிந்துரைத்ததை விசாரிக்க அரசாங்கம் ஏற்கனவே ஒரு ஜனாதிபதி ஆணையத்தை நியமித்துள்ளது என்று அவர் தினேஸ் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த்தேசிய இனத்தின் தனிநாட்டு கோரிக்கையும், சர்வதேச ஒழுங்கு நடைமுறையும்! 43 நிமிடங்கள் முன்
ஐரோப்பாவின் ஐந்து பெரிய பாதுகாப்பு சக்திகள்... கூட்டாக வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்க திட்டம் News Lankasri
பெண்களுடன் பக்கிங்ஹாம் அரண்மனையில் ஆண்ட்ரூ... புகாரளித்த அதிகாரியை மிரட்டிய லண்டன் பொலிசார் News Lankasri
மனோஜிற்கு பெண் ரெடி, அண்ணாமலை கேட்ட கேள்வி, ஷாக்கான விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam