மன்னாரில் மீண்டும் அமைக்கப்பட்ட இராணுவ சோதனைச்சாவடி: மக்கள் விசனம்
மன்னார் பிரதான பாலத்தடியில் சில வருடங்களாக அமைக்கப்பட்டிருந்த இராணுவ சோதனைச் சாவடி கடந்த சில வாரங்களுக்கு முன் அகற்றப்பட்ட நிலையில் மீண்டும் புதிதாக அமைக்கப்பட்டுள்ளமை குறித்து மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
எனினும், கொழும்பு- அத்துருகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற கொலை சம்பவமே இதற்கான காரணம் என்று பாதுகாப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று திங்கட்கிழமை(8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்த நிலையில் பலர் காயமடைந்துள்ளனர்.
இந்தநிலையில், துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்கள் மன்னாரிற்கு சென்று தலைமன்னார் ஊடாக இந்தியாவுக்கு தப்பிச் செல்ல உள்ளதாக புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளதன் காரணமாக சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
இராணுவ சோதனைச் சாவடி
அதன் அடிப்படையில் மன்னாருக்குச் செல்லும் பிரதான பாலத்தடியில் விசேட இராணுவ சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
அதற்கு அமைவாக வேறு மாவட்டங்களில் இருந்து மன்னாரிற்குள் நுழைகின்ற சந்தேகத்திற்கு இடமான வாகனங்கள் சோதனைக்கு உற்படுத்தப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri
