ஐயாயிரம் தந்தால் மட்டுமே பரீட்சை பெறுபேறு: கிளிநொச்சியில் மாணவனிடம் டீல்
கிளிநொச்சி (Kilinochchi) மத்திய மகா வித்தியாலயத்தை சேர்ந்த பழைய மாணவன் ஒருவரிடம் 5,000 ரூபா தந்தால் மட்டுமே பரீட்சை பெறுபேற்றுப் பத்திரத்தை வழங்க முடியுமென பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தை சேர்ந்த பழைய மாணவன் தனது க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேற்றுப் பத்திரத்தை கல்லூரியில் பெறச்சென்றுள்ளார்.
இந்நிலையில், குறித்த பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் ஆயுட்காலச் சந்தாவாக ரூபா 5,000 செலுத்தி உறுப்பினராகினால் மட்டுமே பரீட்சை பெறுபேற்றுப் பத்திரத்தை வழங்க முடியுமென பாடசாலை நிர்வாகித்தனர் அவரிடம் கூறியுள்ளனர்.
விசாரணை
இது தொடர்பில், குறித்த பாடசாலையின் அதிபர் பூலோகராஜாவை தொடர்புகொண்டு வினவியவேளை, குற்றச்சாட்டை மூடிமறைக்கும் விதத்தில் பதில் வழங்கியுள்ளார்.
இந்நிலையில், இது தொடர்பில் கிளிநொச்சி வலயக்கல்விப் பணிப்பாளர் காயத்திரியை தொடர்பு கொண்டு வினவிய போது, சமூக ஊடகங்களில் இந்த பிரச்சினை குறித்து
பதிவுகள் உள்ளதை தான் பார்த்ததாகவும், இது குறித்து விசாரணை மேற்கொள்வதாகவும்
கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று.., ஐஏஎஸ் ஆகாத மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் News Lankasri

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri
