இளைய சமூகத்திடம் வேகமாக பரவும் போதைப்பொருள் : சிவஞானம் சிறிதரன்!
வேலியே பயிரை மேயும் நிலையில் எமது இளைய சமூகத்திடம் போதை வேகமாக பரப்பப்படுகிறது என்று சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி இந்துக்கல்லூரி பழைய மாணவன் ச.டர்சன் எழுதிய “பயணம்” என்ற கவிதை தொகுதி நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்று (26.10.2022) மாலை கிளிநொச்சி இந்துக்கல்லூரி பொன்.சபாபதி மண்டபத்தில் இந்துக்கல்லூரியின் முதல்வர் தலைமையில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து உரையாற்றும் போது,
விடிய காலையில் “அப்பா, அம்மா வெட்டி கொலை,பாடசாலை மாணவர்கள் கைது” இப்படியான செய்திகள் தான் வருகிறதாகவும் பல இளைஞர்கள் தலைகெட்டு நிற்கின்றதாகவும் கூறியுள்ளார்.
மேலும், இதற்கு தகவல் தொழில்நுட்பமும் ஒரு காரணம் ஒபாமா ஜனாதிபதியாக வந்த போது எமக்கு ஏதாவது செய்வார் என எட்டு ஆண்டுகள் காத்து இருந்தோம் இளம் தலைமுறை ஒன்று இறந்து கொண்டே இருக்கிறது.
வேலியே பயிரை மேயும் நிலையில் எமது இளைய சமூகத்திடம் போதை வேகமாக பரப்பப்படுகிறது.
பாடசாலைகளிலிருந்து பல மாணவர்கள் இடை விலகுகின்றனர் இவை அனைத்திற்கும் காரணம் போதைப்பொருட்களே எனத் தெரிவித்துள்ளார்.













13 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி செய்துள்ள மொத்த வசூல்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு Cineulagam

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri
