வவுனியாவில் வீதியினை புனரமைத்து தருமாறு கோரி போராட்டம் (Photos)
வவுனியா, பண்டாரிக்குளம் பிரதான வீதியினை புனரமைத்து தருமாறு கோரி அப்பகுதி மக்களினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டம் இன்று (01.11.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பல வருடங்களாக குறித்த வீதி எவ்வித புனரமைப்பும் இன்றி காணப்படுவதுடன், தற்போது குன்றும் குழியுமாக காணப்படுவதினால் பாதையினை பயன்படுத்துவதில் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் ''3000 மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலை
அமைந்துள்ள பிரதான வீதியினை உடனே புனரமைப்பு செய், வேண்டும் வேண்டும் நீதி வேண்டும், நான்கு கிராம சேவையாளர் பிரிவு மக்கள்
துன்படுவது உங்களுக்கு தெரியவில்லையா?'' போன்ற பல்வேறு வசனங்களை தாங்கிய
பதாதைகளை ஏந்தியவண்ணம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.









சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை த்ரிஷா... திடீர் லண்டன் விசிட்டுக்கு இது தான் காரணம்! Manithan
பல நாட்களுக்கான அத்தியாவசியப் பொருட்களைச் சேமிக்க பிரித்தானியர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தல் News Lankasri