மட்டக்களப்பில் கல்விச் சமூகத்தினரால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்வி பணிமனைகளில் சேவையாற்றும் அதிபர்கள், ஆசிரியர்கள் வலயக்கல்வி பணிமனையின் ஊழியர்களை சிலர் அரசியல் சுயநலம் காரணமாக இலக்கு வைத்து சமூக ஊடகங்களில் பிழையான கருத்துக்களை தெரிவித்து பொதுமக்களை குழப்புகின்ற செயற்பாட்டை கண்டித்து ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது நேற்று(25.02.2024) காலை மட்டக்களப்பு காந்தி பூங்காவில் மட்டக்களப்பு கல்வி சமூகம் கல்வி நலன்புரி அமைப்புகள், அதிபர்கள் ஆசிரியர்கள், தொழிற்சங்கங்கள் இணைந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதிகார அடாவடித்தனம்
மிகவும் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில், ஆசிரியர் சேவைக்கும் தொழிற்சங்க சேவைக்கும் பொருத்தம் இல்லாத உதயரூபன் என்பவரை அனைத்து பதவியில் இருந்தும் நீக்குமாறும் தொழிற்சங்க அதிகார அடாவடித்தனத்திற்கும் முடிவு கட்ட வேண்டிய இவர்கள் இங்கு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஆசிரியர் சமூகத்தை அதிபர்களை அவமானப்படுத்த வேண்டாம் என்ற கருப்பொருளுக்கு அமைய இந்த கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது ஆசிரியர் தொழிற்சங்க உறுப்பினர்கள் அதிபர்கள் தங்களது கண்டன ஆர்ப்பாட்டம் பற்றிய கருத்துக்களை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |