மட்டக்களப்பில் பட்டிப் பொங்கலை கரிநாளாக அனுஷ்டித்து போராட்டம்
மட்டக்களப்பில் கால்நடை பண்ணையாளர்கள் பட்டிப்பொங்கல் தினத்தை கறுப்பு நாளாக அனுஷ்டித்து மயிலத்தமடு மேய்ச்சல் தரை மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த போராட்டமானது இன்று (16.01.2024) மட்டக்களப்பு நகரில் நடைபெற்றுவருகின்றது.
மயிலத்தமடு மாதவனை மேச்சல் தரை பண்ணையாளர்களின் அறவழிப் போராட்டம் 124 நாள் கடந்துள்ள நிலையில் 124 பொங்கல் பானைகளை கருப்பு நாடா கட்டி தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தி இருந்தனர்.
மாதவனை மயிலத்தமடு பகுதியில் அத்துமீறிய பயிர் செய் கையாளர்களால் இதுவரை 254 கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
விவசாய அமைப்பினர்
மேலும், இந்த போராட்டத்தில் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன், மட்டக்களப்பிலுள்ள பண்ணையாளர்கள், விவசாய அமைப்பினர், மதத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் ஈடுபட்டடு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
