யாழில் பொலிஸாரின் காவலிலிருந்து கைதி ஒருவர் தப்பியோட்டம்
வடமராட்சி பகுதியில் வீடுடைத்து திருட்டு மற்றும் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்த கும்பலைச் சேர்ந்த ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று முற்பகல் பருத்தித்துறை பொலிஸ் காவலில் இருந்து தப்பித்துள்ளார்.
மீட்கப்பட்டுள்ள பொருட்கள்

பருத்தித்துறை பொலிஸ் புலனாய்வாளர்கள் முன்னெடுத்த விசாரணைகளின் போது, நேற்று அல்வாய் பகுதியில் வைத்து 23 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து 3 பவுண் தாலி, 2 பவுண் சங்கிலி, மோட்டார் சைக்கிள் மற்றும் ஐ போன் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், சந்தேகநபரின் உடமையிலிருந்து 3 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தப்பி ஓட்டம்

சந்தேகநபரை இன்று நண்பகல் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தவிருந்த நிலையில் அவர் இன்று முற்பகல் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திலிருந்து தப்பித்துள்ளார்.
மலசலகூடத்தின் யன்னல் இடைவெளி ஊடாக அவர் வெளியேறி தப்பித்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கும்பலை சேர்ந்த மற்றையவர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில் தேடப்பட்டு
வருகின்றனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 9 மணி நேரம் முன்
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri