யாழில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக கிராம அலுவலர்களுக்கான முன்னாயத்த செயலமர்வு
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல்கள் தொடர்பாக கிராம அலுவலர்களுக்கான முன்னாயத்த செயலமர்வு, யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த செயலமர்வானது, யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்றையதினம் (21.08.2024) இரண்டு அமர்வுகளாக நடைபெற்றுள்ளது.
இதன்போது, தலைமையுரையாற்றிய மருதலிங்கம் பிரதீபன், ஒவ்வொரு வாக்களிப்பு நிலையங்களிலும் தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்படும் உத்தியோகத்தர்கள் தேர்தல் சுமுகமாகவும், நீதியாகவும் நடைபெற ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
கிராம அலுவலர்களின் கடமைகள்
மேலும், இதற்கு கிராம அலுவலர்களின் பங்களிப்பும் காத்திரமானது எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக வாக்களிப்பு நிலையங்களில் கிராம அலுவலர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக உதவித்தேர்தல் ஆணையாளர் இ.கி.அமல்ராஜால் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செயலமர்வில் மாவட்டத்தின் அனைத்து நிர்வாக கிராம அலுவலர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |