தமிழ் பொது வேட்பாளர் ஆதரவு தொடர்பில் ஆயர் ஜோசப் பொன்னையா விளக்கம்
தமிழ் பொது வேட்பாளருக்கு மட்டக்களப்பு ஆயர் பூரண ஆதரவு தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் வெளிவந்த செய்தி மற்றும் நாடாளுமன்ற உறப்பினர்களான எம்.சுமந்திரன், இரா.சாணக்கியனன் ஆகியோரை தவறாக நான் பேசியதாக ஊடகங்களில் வெளிவந்த செய்திகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பாக திரிவுபடுத்தி பொய்யாக வெளியிடப்பட்டுள்ளது என ஓய்வு பெற்ற மட்டு மறைமாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா தெரிவித்துள்ளார்.
இதனை எச்சரிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மட்டக்களப்பு தாண்டவன்வெளி முதியோர் இல்லத்தில் இன்று வியாழக்கிழமை (22) இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தார்.
சுமந்திரன் - சாணக்கியன்
“நான் ஓய்வு பெற்று தங்கியிருக்கம் நிலையில் என்னை பலர் வந்து சந்தித்துச் செல்கின்றனர். இந்த நிலையில் சில ஊடகவியலாளர்களும் வந்து சந்தித்து சென்றவர்கள்.
இந்த நிலையில் நான் எம்.சுமந்திரன், இரா.சாணக்கியனுக்கு எதிராகவும் மற்றும் தமிழ் பொது வேட்பாளருக்கு பூரண ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் தவறாக திரிவுபடுத்தி என்னையும் குழப்பி அவர்களும் குழம்பியுள்ளனர்.
எனவே நான் அவ்வாறு எதுவும் தெரிவிக்கவில்லை. நான் சொல்ல விரும்புவது இது தான். எமது நாட்டில் சுதந்திரம் வேண்டும். எல்லோரும் சுதந்திரமாகவும் புத்தி
வேராகவும் எல்லோரும் சமாதானமாகவும் வாழவேண்டும். அதற்காக யார் யாருக்கு ஆதரவு
தெரிவிக்க வேண்டுமே அவர்களுக்கு அதரவு தெரிவிக்கவும்.” என மறைமாவட்ட ஆயர் தெரிவித்துள்ளார்.