பெண் அதிகாரிக்கு வழங்கப்பட்டுள்ள பதவி:உயர்நீதிமன்றில் மனு தாக்கல்

Sri Lanka Police Sri Lanka
By Sivaa Mayuri Nov 15, 2022 04:12 PM GMT
Report

இலங்கை வரலாற்றில் முதல் பிரதிக் காவல்துறை மா அதிபராக, பிம்ஷானி ஜெசின் ஆராச்சி என்ற பெண் அதிகாரிக்கு வழங்கப்பட்ட பதவி உயர்வை இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு, 2023 மே 18 ஆம் திகதி வரை உயர்நீதிமன்றத்தினால் பரிசீலனைக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அடிப்படை உரிமை மீறல் மனு

பெண் அதிகாரிக்கு வழங்கப்பட்டுள்ள பதவி:உயர்நீதிமன்றில் மனு தாக்கல் | A Post Given To A Woman Officer

இந்த மனு நீதியரசர்கள் பிரியந்த ஜயவர்தன, ஷிரான் குணரத்ன மற்றும் குமுதினி விக்ரமசிங்க ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தநிலையில், மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, தனிப்பட்ட காரணங்களுக்காக மனு மீதான பரிசீலனையை வேறு திகதிக்கு ஒத்திவைக்குமாறு கோரியுள்ளனர்.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம், இந்த வழக்கை 2023 மே 18ஆம் திகதியன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டுள்ளது.

காவல்துறையின் முன்னாள் பேச்சாளர் ருவான் குணசேகர உட்பட 32 சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர்களால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது, நடைமுறைக்கு முரணாக இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்க வேண்டும் என்று மனுதாரர்கள் கோரியுள்ளனர்.

தரநிலை பதவி உயர்வு நடைமுறை

பெண் அதிகாரிக்கு வழங்கப்பட்டுள்ள பதவி:உயர்நீதிமன்றில் மனு தாக்கல் | A Post Given To A Woman Officer

காவல்துறை அதிபர், தேசிய காவல்துறை ஆணைக்குழு, சட்டமா அதிபர் மற்றும் பிரதி காவல்துறை மா அதிபராக நியமிக்கப்பட்ட பிம்ஷானி ஜசின் ஆராச்சி ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

பிரதிக் காவல்துறை பதவி உயர்வு தொடர்பான விதிமுறைகளில் 'பெண்கள்' என்ற வார்த்தை குறிப்பிடப்படாததால், எந்த ஒரு பெண் காவலரையும் இந்த பதவிக்கு உயர்த்த முடியாது என்று மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதற்கமைவாக, தரநிலை பதவி உயர்வு நடைமுறைகளை மீறி, பிம்ஷானி ஜெசின் ஆராச்சிக்கு வழங்கப்பட்ட பதவி உயர்வு சட்டவிரோதமானது என அறிவித்து அதனை செல்லுபடியற்றதாக்குமாறு மனுதாரர்கள் தமது மனுவில் கோரியுள்ளனர்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US