மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள எரிபொருள் விநியோகங்கள்(Video)
இதன்படி, அம்பாறை - கல்முனை பிரதேசத்தில் ஓ.எம்.அலியார் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று(26) பெட்ரோல் விநியோகிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விநியோகம்
எரிபொருள் விநியோகமானது அமைதியான முறையிலும், நேர்த்தியாகவும் நேற்றைய தினம் முற்பகல் முதல் மாலை வரை இடம்பெற்றுள்ளது.
இந்த செயற்திட்டத்திற்கு கல்முனை பொலிஸ் நிலைய உத்தியோகத்தகர்களும் பெட்ரோல் நிலைய உரிமையாளர் மற்றும் ஊழியர்களும் இணைந்து இந்த திட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
வாகனங்களின் புகை பரிசோதனை மேற்கொண்டு இறுதி இலக்கம்(6789) ஊடாக மக்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்னால் மக்கள் கூடுவதை பொலிஸாரின் தடுத்தமையும், எரிபொருள் உரிமையாளரின் முறையான முகாமைத்துவசெயற்பாடுமே இந்ததிட்டம் வெற்றிபெற முழு காரணமென பொதுமக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மக்கள் பாராட்டு
மருதமுனை, பெரியநீலாவணை, கல்முனை, நற்பிட்டிமுனை, சவளக்கடை, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, என பல எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் வரிசையில் பல நாட்கள் காத்திருந்து ஏமாற்றமாக வீடு திரும்பிய நிலையில் பலர் இந்த திட்டத்தின் மூலம் பலன் பெற்றுள்ளதாக ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.
இந்த திட்டம் சிறப்பாக வெற்றியடைந்தமைக்கு பொதுமக்கள் உரிமையாளருக்கு தமது பாராட்டுக்களை சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளனர்.
எரிபொருள் உரிமையாளரினால் பணிக்கமர்த்தப்பட்ட பணியாளர்களே வருகைதந்து தொடர் இலக்கம் வழங்கி நேர்த்தியாக இந்த திட்டத்தை மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
யாழில் எரிபொருள் விநியோகிக்கும் நேரத்தில் மாற்றம் |
யாழ்ப்பாணம்
யாழ்ப்பணத்தில் எரிபொருள் விநியோகமானது சீரான முறையில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் - கைதடியில் அமைந்துள்ள பொன்னம்பலம் அண்ட் சன்ஸ் எரிபொருள் நிரப்பு நிலையத்திலே நேற்றைய தினம்(26) பெட்ரோல், டீசல் விநியோகம் இடம்பெற்றுள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முகாமையாளர் செந்தில் செல்வம் றுபிந்தன் எரிபொருள் விநியோகம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விநியோகம்
இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், “காலை 9 மணி முதல் கியூ.ஆர் அடிப்படையில் 6,7,8,9 ஆகிய கடைசி இலக்கங்கங்களை கொண்ட வாகனங்களுக்கு இதன் போது 6600 லிட்டர் வரையான எரிபொருள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.
முகாமையாளர் செந்தில் செல்வம் றுபிந்தன், பெற்றோல் விநியோகத்தைத் தொடர்ந்து நேற்று பிற்பகலில் 300 வாகனங்களுக்கான டீசல் விநியோகம் இடம்பெற்றுள்ளது.
விவசாயிகளின் நன்மை கருதி இதற்கு மேலதிகமாக உழவு இயந்திரங்களுக்கும் டீசல் வழங்கப்பட்டுள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.