புதுக்குடியிருப்பில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தன்னை தானே சுட்டு தற்கொலை!
புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் ஒன்று இன்று(1) பதிவாகியுள்ளது.
கண்டி மாவட்டத்தினை சேர்ந்த சாயன்ட் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாகப் புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தின் பிரதான நுழைவாயில் கவலரனில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கியினை எடுத்து தனக்கு தானே தலையில் அவர் சுட்டுக்கொண்டதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த நபர் ஆபத்தான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை அனுமதிக்கப்பட்ட போதும் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.





ஜெயிலர் 2 இன்னும் ரிலீஸ் ஆகல.. அதுக்குள்ள ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு! என்ன தெரியுமா Cineulagam

Gen Z போராட்டக்காரர்களுடன் இணைந்த ராணுவம் - நேபாளத்தையடுத்து மற்றொரு நாட்டில் ஆட்சி கவிழ்ப்பு? News Lankasri

ஜீ தமிழின் கெட்டி மேளம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் தகவல்... என்ன இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்க Cineulagam
