பிரபல பொலிஸ் அதிகாரியொருவருக்கு கோடிக்கணக்கில் சொத்துக்கள்! திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்
பொலிஸ் திணைக்களத்தில் அண்மைக்காலமாக பொதுமக்கள் மத்தியில் பிரபலம் பெற்று வரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எரிக் பெரேரா ஆடம்பர மாளிகை உள்ளிட்ட கோடிக்கணக்கான சொத்துக்களை திரட்டியுள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் தென்னிலங்கை இணையத்தளமொன்றில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எரிக் பெரேராவுக்கு நீர்கொழும்பில் மூன்று மாடி ஆடம்பர வீடொன்று சொந்தமாக உள்ளது.
ஆடம்பர சொத்துக்கள்
அதன் மேல் மாடியில் நவீன நீச்சல் குளம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. குறித்த சொகுசு மாளிகையின் ஆகக்குறைந்த பெறுமதி ஐம்பது கோடி ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதே போன்று அவர் பயன்படுத்தும் தனிப்பட்ட கார் பல கோடி ரூபா பெறுமதி மிக்கது.
பொலிஸ் திணைக்களத்தினால் அவருக்கு வழங்கப்பட்ட சம்பளத்தைக் கொண்டு இவ்வாறான ஆடம்பர சொத்துக்களை அவர் வாங்கியிருக்க முடியாது என்றும் குறித்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் வேல்விமானம் திருவிழா





கூலி படத்தில் தரமான நடித்து அசத்திய சௌபின் இப்படத்திற்காக வாங்கிய சம்பளம்.. எத்தனை கோடி தெரியுமா? Cineulagam

ரஷ்யாவும் உக்ரைனும் சொந்தமாக்க மல்லுக்கட்டும் Donetsk... குவிந்து கிடக்கும் புதையல் என்ன? News Lankasri
