அமெரிக்காவில் நடுவானில் திடீரென உடைந்து விழுந்த விமான கதவு: குழப்பத்தில் பயணிகள்
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஜான் எப்.கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் (John F. Kennedy International Airport) இருந்து புறப்பட்ட விமானம் ஒன்றில் அவசர கதவுகள் தீடிரென கீழே விழுந்த சம்பவத்தினால் பயணிகள் குழப்பமடைந்துள்ளனர்.
டெல்டா ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் 520 என்ற எண் கொண்ட போயிங் 767 ரக குறித்த விமானமானது லாஸ் ஏஞ்சல்ஸ்(Los Angeles) நகர் நோக்கி புறப்பட்டு சென்றுள்ளது.
வெளியான அறிவிப்பு
இதன்போது, அந்த விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்த வேளை, அதன் அவசரகால கதவு திடீரென விமானத்தில் இருந்து தனியாக பிரிந்து கீழே விழுந்துள்ளது.
இது தொடர்பில் விமானிக்கு தகவல் சென்ற நிலையில் உடனடியாக அந்த விமானம் மீண்டும் நியூயார்க்குக்கு திரும்பி அனுப்பப்ட்டுள்ளது. இந்த சம்பவம், விமானம் புறப்பட்டு சென்று 33 நிமிடங்கள் கழிந்து நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த சம்பவம் தொடர்பில் விமான பயணி ஒருவர் கூறும்போது, விமானத்திலிருந்து ஒரு பெரிய சத்தம் கேட்டது. இதனால், விமானி அறையில் இருந்து அடுத்து, வெளியான அறிவிப்புகளை கூட சரியாக கேட்க முடியவில்லை. இந்த சம்பவம் எதிரொலியாக, பயணிகள் அனைவரும் உண்மையில் பயந்து போய் விட்டோம் என்று கூறியுள்ளார்.
மீட்பு முயற்சிகள்
மேலும், டெல்டா விமான நிறுவன பிரதிநிதி ஒருவர் சம்பவம் குறித்து கூறும்போது, எங்களுடைய நிறுவனம் மீட்பு முயற்சிகளுக்கு முழுமையாக ஆதரவளிக்கும். விசாரணைக்கு முழு அளவில் ஒத்துழைப்பு அளிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் விமானத்திலிருந்து அவசரகால கதவு கீழே விழுந்த சம்பவம் பற்றி அமெரிக்காவின் மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் விசாரணை நடத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam

வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan

உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam

உன்னால ஒரு மண்ணும் செய்ய முடியாது தர்ஷன் கொடுத்த பதிலடி, குணசேகரனின் அடுத்த அதிரடி.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan
