இலங்கைக்கு தங்கம் கடத்த முற்பட்ட ஒருவர் கைது
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு தங்கம் கடத்த முற்பட்ட நபர் ஒருவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
டுபாயிலிருந்து - கொழும்பு வழியாக திருச்சி வந்தடைந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட போதே இவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை குறித்த நபர் சந்தேகத்திற்கு இடமாக நடந்து கொண்டதை கவனித்த அதிகாரிகள் அவரது உடைமைகளை சோதனை செய்துள்ளனர்.
பறிமுதல் நடவடிக்கை

இந்நிலையில் அவர் அணிந்து வந்த காலணியை கழட்டி சோதனை மேற்கொண்டதில் காலணியின் நடுவில் பேஸ்ட் வடிவில் மறைத்து வைத்து எடுத்து வந்த ரூபாய் 28 இலட்சத்து 30 ஆயிரத்து 954 மதிப்புள்ள 467 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை குறித்த சந்தேகநபரிடம் அதிகாரிகள் நடத்தி வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri