பெண் வேடமணிந்து வீடுகளுக்குள் புகுந்த ஆண்
பெண் வேடமணிந்து வீடுகளுக்குள் புகுந்து திருட்டில் ஈடுபட்ட நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
களுத்துறை தெற்கு, லகோஸ்வத்தை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே களுத்துறை வடக்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரைஸ் குக்கர், தண்ணீர் மோட்டார்கள், பித்தளைப் பாத்திரங்கள், பாத்திரங்கள் மற்றும் 7 சேலைகள் உள்ளிட்ட பல உபகரணங்கள் சந்தேகநபரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, அயலவர்கள் யாரும் இல்லாத வீடுகளுக்குள் பெண் போன்று முடி சூடி, புடவை உடுத்திக்கொண்டு பிரவேசிக்கும் போது அவர்களுக்கு சந்தேகம் வராது என தெரிவித்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.