குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை
குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பலாங்கொடை, புலத்கம பிரதேசத்தில் நேற்று இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அப்பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபரின் இல்லத்துக்கு அருகில் வைத்தே இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் விசாரணை

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் குறித்த நபரை வாளால் வெட்டிவிட்டு அதே மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
காயமடைந்த நபர் பலாங்கொடை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் செல்லும்போது உயிரிழந்துவிட்டார் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் செய்யப்பட்டுள்ளார் என்று விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ஸ்ருதி வீட்டு உணவால் அவதிப்படும் விஜயா, எலி தொல்லையில் மாட்டிக்கொண்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
விஜய்க்கு தொடரும் சிக்கல்.. அப்போ புரியல, இப்போ புரியுது! ரஜினி பற்றி நடிகை கஸ்தூரியின் பதிவு Cineulagam