நிந்தவூர் பகுதியில் போதைப்பொருள் வியாபாரி ஒருவர் கைது!
அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு போதைப்பொருள் விற்பனை செய்யும் முக்கிய போதைப்பொருள் வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த வியாபாரியை பின்தொடர்ந்த அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தின் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இதன்போது கைதான சந்தேக நபரிடமிருந்து 23 கிராம் 300 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
போதைப்பொருட்கள் மீட்பு
அம்பாறை பிரிவு ஊழல் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் முதித பிரியங்கரவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இந்த சோதனையின் போது, சந்தேக நபர் ஐஸ் போதைப்பொருளை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட நவீன ரக வகை கார், 03 தொலைபேசிகள், 04 வங்கி அட்டைகள் மற்றும் 01 வங்கி புத்தகம் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபர் நிந்தவூர் மீரா நகர் ஜும்மா பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த 33 வயதுடைய சின்ன தம்பி மொஹமட் றம்சின் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் வர்ண ஜெயசுந்தரவின் ஆலோசனைக்கு அமைய அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவுபொறுப்பதிகாரி கே.ஏ.எம்.பிரியங்கரவின் தலைமையிலான குழுவினரால் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.








ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 8 மணி நேரம் முன்

சிறகடிக்க ஆசை வெற்றி வசந்த் மனைவிக்கு என்ன ஆச்சு.. கதறி அழும் பொன்னி சீரியல் வைஷ்ணவி.. வைரல் வீடியோ Cineulagam

ரஷ்யாவின் மலிவு விலை கச்சா எண்ணெய் வாங்கி... உக்ரைனுக்கு டீசலாக ஏற்றுமதி செய்யும் இந்தியா News Lankasri
